வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
மும்பையில் ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை முடிவு தொடர்பான மாதந்திர கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
கூட்டம் நிறைவடைந்த பின் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் படி வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கான வட்டி விகிதம் 4 விழுக்காடாகவும், வங்கிகளிடம் இருந்து பெறும் வைப்புத் தொகைக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் வட்டி விகிதம் 3 புள்ளி மூன்று ஐந்து விழுக்காடாகவும் நீடிப்பதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் பெட்ரோல் டீசல் மீதான உற்பத்தி வரி, மதிப்புக் கூட்டு வரி ஆகியவற்றைக் குறைத்தது வாங்கும் சக்தியையும் அதிகரித்து நுகர்வுத் தேவைக்கு ஆதரவளிக்கும் எனத் தெரிவித்த அவர் நடப்பாண்டில் பொருளாதார வளர்ச்சி 9 புள்ளி 5 விழுக்காடாக இருக்கும் எனக் கணித்துள்ளதாகவும் தெரிவித்தள்ளார்.