‘மிக்ஜாம்’ புயல் ஏற்படுத்திய பாதிப்புகளால் மீட்பு , நிவாரண, மருத்துவ நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தமிழ்நாடு மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மிக்ஜாம் புயலால் பெய்த கனமழையின் காரணமாக சென்னையில் உள்ள பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ள பொதுமக்கள் அத்யாவசிய தேவைகளை கூட பெற முடியாமல் தவித்து வருகின்றனர் .
இந்நிலையில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை கண்காணிக்க முதல்வர் ஸ்டாலின் நியமித்திருந்தார் அந்தவகையில் தற்போது அமைச்சர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை கள ஆய்வு செய்யும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர் .
இந்நிலையில் ‘மிக்ஜாம்’ புயல் ஏற்படுத்திய பாதிப்புகளால் மீட்பு , நிவாரண, மருத்துவ நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தமிழ்நாடு மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை சைதாப்பேட்டையில் மழைக்கால சிறப்பு முகாம் தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது :
16,516 மருத்துவ முகாம்கள் நடைபெற்றுள்ளது. இதன் மூலம் 7 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. சித்தா, யுனானி, அலோபதி என அனைத்து வகையான மருந்துகளும் கையிருப்பில் உள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை சரியாக எடுத்திருக்கவில்லை. நாங்கள் எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் இந்த கனமழை பாதிப்பில் இருந்து மக்களை காப்பாற்றியுள்ளோம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.