திரையுலகில் நட்சத்திர ஜோடியாக வலம் வந்த ஏ.ஆர்.ரஹ்மான் – சாய்ரா பானு தம்பதி விவாகரத்து பெறுவதாக அதிர்ச்சி தரும் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
இந்திய சினிமாவில் இருக்கும் பல முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான். சிறு வயது முதலே இசையில் தவழ்ந்து வளர்ந்த இவர் இன்று ஆஸ்கர் நாயகனாக நம் மனதில் குடிகொண்டுள்ளார்.
உலகம் முழுவதும் ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் இவர் இதுவரை ஏராளமான சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து தினம் தோறும் நம்மை முணுமுணுக்க வைக்கிறார் .
இந்நிலையில் தற்போது ஏ.ஆர்.ரஹ்மான் – சாய்ரா பானு தம்பதி விவாகரத்து பெறுவதாக அதிர்ச்சி தரும் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
Also Read : கனமழை எதிரொலி : 6 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு..!!
பல ஆண்டுகால திருமண வாழ்க்கைக்குப் பிறகு, சாய்ரா மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் இருவரும் பிரிவதாக கடினமான முடிவை எடுத்துள்ளனர்; அவர்களுடைய உறவில் ஏற்பட்ட சில உணர்வுரீதியான அழுத்தத்துக்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது
ஒருவர் மீது ஒருவர் அவர்கள் ஆழமான அன்பை வைத்திருந்தாலும், பதற்றங்களும் சிரமங்களும் தங்களுக்கு இடையே ஒரு தீர்க்க முடியாத இடைவெளியை உருவாக்கியுள்ளன என்பதை அவர்கள் கண்டறிந்துள்ளனர்;
இந்த நேரத்தில் எந்த தரப்பினரும் இந்த விரிசலை சரிசெய்ய இயலாது வலி மற்றும் வேதனையில் தான் இந்த முடிவை எடுத்துள்ளதாக இருவரும் தெரிவித்துள்ளனர்.
வாழ்க்கையின் கடினமான அத்தியாயத்தை கடக்கும் இந்த நேரத்தில், சாய்ராவும் ஏ.ஆர்.ரஹ்மானும் தங்களது தனியுரிமைக்கு மதிப்பளிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.