தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வான நீட்முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு, பல்வேறு குழப்பங்களுக்கும் வழக்குகளுக்கு இடையே, கடந்த 21-ம் தேதி நீதிமன்ற அனுமதியோடு நடைபெற்றது. அதன் படி 21-ம் தேதி நாடு முழுவதும் 849 மையங்களில் முதுநிலை நீட் தேர்வு நடைபெற்றது. மொத்தம் 1,82,318 பேர் நீட் தேர்வு எழுதினர். அதற்கான தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் முதுநிலை நீட் தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்டது என்றும் நீட் தேர்வில் தகுதிப்பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துகள் என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, தேர்வில் தேர்ச்சியடைந்த அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்து கூறியுள்ளார். மேலும் 10 நாள்களிலேயே தேர்வு முடிவுகளை வெளியிட்டதற்கு தேசிய தேர்வு வாரியத்திற்கு அவர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். மேலும் மாணவர்கள் தங்களது முடிவுகளை தெரிந்துக்கொள்ளுவதற்கான இணையதள தொடர்பினை பதிவிட்டுள்ளார்.

தேர்வு முடிவுகளை https://www.nbe.edu.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். https://drive.google.com/file/d/1xRrqn0G8A_PO2mkpN1zhbmlZz2i9t9Jz/view என்ற நேரடி லிங்க் வழியாகவும் மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவை அறியலாம்.