சென்னை போலீசாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட ரவுடி சீசிங் ராஜா தொடர்புடைய இடங்களில் வருவாய்த்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதி தனிப்படை போலீசாரால் தீவிரமாக தேடப்பட்டு வந்த ரவுடி சீசிங் ராஜா ஆந்திர மாநிலம் கடப்பாவில் கடந்த சில நாட்களுக்கு முன் கைது செய்யப்பட்ட நிலையில் போலீசாரை தாக்கிவிட்டு தப்பமுயன்ற போது என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார் .
Also Read : ஒரு நாளைக்கு 3 மணி நேரம் உடற்பயிற்சியா..? மாரடைப்பால் உயிரிழந்த ஜிம் உரிமையாளர்..!!
என்கவுன்ட்டர் செய்யப்பட்ட ரவுடி சீசிங் ராஜா மீது 5 கொலை வழக்குகள் உட்பட 33 வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் தற்போது ரவுடி சீசிங் ராஜா தொடர்புடைய இடங்களில் வருவாய்த்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
சீசிங் ராஜாவின் வீடு மற்றும் அவர் தொடர்புடைய உறவினர்களின் வீடுகளில் காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் இணைந்து சோதனை நடத்தி வருகின்றனர்.
வில்லிவாக்கம், தாம்பரம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது .