வணக்கம் மக்களே..! ஒரு படம் பார்த்து அந்த ஹீரோவுக்காக பெண்கள் சாரை சாரையாக கண்ணீர் வடித்த சம்பவம் (beautiful memories) பற்றி தான் இப்போ பாக்க போறோம்..!
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் (MGR) என்றால் பெண்களுக்கு உயிர் அவரும் தாய்குலத்தை மதிப்பவர்.
பெண்கள் யாராவது கஷ்டப்படுகிறார்கள் என்றால் ஓடிவந்து உதவுபவர் படங்களில் மட்டுமல்ல நிஜத்திலும் அப்படித்தான்.
விழுப்புரம் அருகே, அவர் நடந்து சென்ற போன்று வயலில் வேலை பார்த்த பெண்கள் ஓடி வந்து அவரை கைகூப்பி வணங்கினார்கள்.
சில பெண்கள் வயலில் வேலை செய்துவிட்டு சேற்று கைகளால் எம்ஜிஆர் கை கொடுத்தார்கள். எம்ஜிஆர் அவரும் தொட்டு அவரை மகிழ்வித்தார். அப்படி பெண்களினத்தில் மாபெரும் செல்வாக்கு பெற்ற தலைவர்.
அவரைப் பற்றிதான் இப்போது பார்க்க போகலாம் வாங்க…!
பெண்கள் அழுது கொண்டே பார்த்த திரைப்படம்..!
சத்யா மூவீஸின் ‘காவல்காரன்’ இவரது திரைப்படங்களில் ஒரு ஹிட். எம்ஜிஆர் – ஜெயலலிதா ஜோடி.
‘எம்ஜிஆர் குரல்’. இதுதான் அப்போதைய டாபிக். ஆகவே, இந்தப் படம் பலத்த எதிர்பார்ப்புடன் எதிர்பார்க்கப்பட்டது. ரிலீஸானதும் தொடர்ந்து ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடியது.
‘காவல்காரன்’ படம் 1966-ன் பிற்பகுதியில் பூஜை போடப்பட்டு படப்பிடிப்பு தொடங்கியது. ‘மெல்லப்போ.. மெல்லப்போ… மெல்லிடையாளே மெல்லப் போ…’, ‘அடங்கொப்புரானே சத்தியமா நான் காவல்காரன்…’ ஆகிய பாடல் காட்சிகள், ஓரிரு வசனக் காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட்டிருந்தன.
தொடர்ந்து, படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த நிலையில், 1967 ஜனவரி 12-ம் தேதி திரையுலகம் மட்டுமல்லாது, தமிழகத்தையே அதிரவைத்து அரசியல் வரலாற்றைத் திருப்பிப் போட்ட அந்த அதிர்ச்சி சம்பவம் நடந்தது. மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை நடிகவேள் எம்.ஆர். ராதா துப்பாக்கியால் சுட்டுவிட்டார்.
ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட எம்.ஜி.ஆர்., டாக்டர்களின் பல மணி நேர போராட்டத்துக்குப் பின்னர், அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார்.
67ம் ஆண்டு செப்டம்பர் 7ம் தேதி வெளியானது..
‘காவல்காரன்’. இந்தப் படத்தின் 95 சதவீதக் காட்சிகள் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்குப் பிறகே எடுக்கப்பட்டன. எம்.ஜி.ஆர். பேசும் காட்சிகளில் அவரது வழக்கமான வெண்கலக் குரல் உடைந்துபோய், சற்று சன்னமாகவும் கட்டையாகவும் வார்த்தைகள் தெளிவில்லாமலும் குரல் ஒலித்தது. தீவிரமான பயிற்சிகளில் ஈடுபட்டுச் சொந்தக் குரலில் பேசி நடித்தார் எம்.ஜி.ஆர் . ‘காவல்காரன்’ படம் பார்த்த ரசிகர்கள் கண்ணீர் சிந்தவும் பெண்கள் அடித்துக்கொண்டு அழவும் இதுதான் காரணம்!
முதல்நாள் படம் பார்த்து விட்டு, அழுது கொண்டே வந்தார்கள். கதறி கண்ணீர்விட்டபடியே வந்தார்கள். ‘வாத்தியார் குரலே மாறிப்போச்சே’ என்று நெஞ்சில் அடித்துக்கொண்டு, அடுத்த காட்சிக்கு அப்படியே நின்றார்கள்.
முதல் ஷோ பார்த்துவிட்டு, இரண்டாவது ஷோவும் பார்த்தார்கள். எம்ஜிஆரின் குரல் மாறியிருக்கும் விஷயம், தமிழகம் முழுவதும் தீயாய்ப் பரவியது. கூட்டம்கூட்டமாக வந்து பார்த்தார்கள். குடும்பம் குடும்பமாக வந்து பார்த்தார்கள்.
பார்த்தவர்கள் எல்லோரும் அழுதுகொண்டே பார்த்தார்கள். சுடப்பட்டு குரலே மாறிப் போய்விட்ட எம்ஜிஆர், வசனம் பேசப்பேச, ‘தலைவா தலைவா’ என்கிற கோஷங்கள், எம்ஜிஆரின் லாயிட்ஸ் சாலை வீட்டிலும் தி.நகர் வீட்டிலுமாக எதிரொலித்துக் கதறியது.
‘காவல்காரன்’ படத்துக்கு முதலில் வைத்த பெயர் ‘மனைவி’. பிறகுதான் ‘காவல்காரன்’ என்று பெயர் மாற்றப்பட்டது (beautiful memories).
சென்னை குளோப் தியேட்டரில், பெண்களுக்காகவே தனிக்காட்சி திரையிட்டதெல்லாம் உலக சாதனை. இலங்கையில் இந்தப் படம் 170 நாட்களைக் கடந்து ஓடியது. மிகப்பெரிய வசூலை பெற்றுத்தந்தது.
இப்படி எங்கள் தலைவனுக்காக பெண்கள் அழுகிறார்கள் சொல்லுங்கள் அப்படிப்பட்ட மாபெரும் தலைவன் இப்போது நம்மிடம் இல்லாதது வருத்தம் தான்..