இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பரும் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் வந்த கார் விபத்துக்குள்ளானது. இன்று அதிகாலை சுமார் 5.30 மணியளவில் டெல்லி – உத்தரகாண்ட் நெடுஞ்சாலையில் டெல்லி நோக்கி வந்த பொழுது இந்த விபத்து நிகழ்ந்தது.
விபத்து குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், அதிகாலை நேரத்தில் கார் நெடுஞ்சாலையில் வந்துகொண்டு இருந்தது. வேகமாக வந்த கார் சாலையின் நடுவே வந்திருந்த டிவைடர் மீது மோதியதால் கார் நிலை தடுமாறி உருண்டு சென்றது. சாலையின் ஓரமாக விழுந்த கார் தீ பிடிக்க தொடங்கியது.
தீ பற்ற தொடங்கியதும், கார் கண்ணாடியை வடைத்து பண்ட் வெளியே வார முயற்சிக்க அருகில் இருந்த மக்கள் அவரை கை கொடுத்து காப்பற்றி மருத்துவமனைக்கு அனுபினர் என்று அங்கு அய்வு மேற்கொண்ட அதிகாரி தெரிவித்தார். பண்ட் வந்தது உயர் ரக பென்ஸ் கார் என விபத்தை பார்த்த மக்கள் கூறினர்.
கார் வந்த போது பணி பொழிவு இல்லை என்றும் சாலையில் வாகனங்கள் வந்து செல்லவது தெளிவாக தெரிந்ததாக கூறுகின்றனார். மேலும் அதிகாலை வேலை என்பதால் பண்ட் எதிர்பாராமல் உறங்கியிருக்க கூடுமே என்றகோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொள்ளவுள்ளதாக தெரிகிறது.
சமீபத்தில் தான் பண்ட் உடற் தகுதி பயிற்சிகாக பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் வாரியத்தில் சேர்ந்து பயிற்சி மேற்கொள்ள இருந்தார். மேலும் அவரது உடல் நிலை குறித்து அணியின் பயிரச்சியாளர் லக்ஷ்மன் தகவல் தெரிவித்துள்ளார். அதில் அவர் தற்போது பாதுகாப்பாக உள்ளதாகவும் அவருக்கு தொடர்ந்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாக கூறியுள்ளார்.