இடைவிடாமல் நடைபெற்று வரும் இஸ்ரேல் – பாலஸ்தீன் போரில் பாதிக்கப்பட்டுள்ள பாலஸ்தீன மக்களுக்காக ரூ.101.4 கோடி நிதியுதவி கூடுதலாக அளிக்கப்படும் என பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.
பாலஸ்தீனர்களின் ஹமாஸ் அமைப்பிற்கும் இஸ்ரேலுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் தொடர்ந்து வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் இஸ்ரேல் மீது ஹமாஸ் ஜிஹாதிகள் மிகப் பெரிய தாக்குதலை நடத்தினர்.
இதில் இஸ்ரேலில் வசிக்கும் 1,500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அது மட்டும் இன்றி 100க்கும் மேற்பட்டோரையும் ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல், பாலஸ்தீனர்களின் எஞ்சிய நிலப்பரப்பின் மீது கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகிறது . இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காஸா, மேற்கு கரை பகுதிகளில் 2,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இடைவிடாமல் நடைபெற்று வரும் இஸ்ரேல் – பாலஸ்தீன் போரில் பாதிக்கப்பட்டுள்ள பாலஸ்தீன மக்களுக்காக ரூ.101.4 கோடி நிதியுதவி கூடுதலாக அளிக்கப்படும் என பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ரிஷி சுனக் இந்த போரில் ஹமாஸ் அமைப்பினரால் பாலஸ்தீன மக்களும் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் பாலஸ்தீன மக்கள் விரும்பும் எதிர்காலத்தை ஹமாஸ் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை எனவும் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.