சுவிட்சர்லாந்து நாட்டின் டென்னிஸ் ஜாம்பவானான ரோஜர் பெடரர் சர்வதேச டென்னிஸ் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தற்போது லண்டனில் நடிக்கவிருக்கும் லாவர் கோப்பை தொடரில் தான் கடைசியாக விளையாடவுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த ஓய்வு அறிவிப்பை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியீட்டுள்ளார்.
பெடரர் 2003 ஆம் ஆண்டு தனது முதல் கிராண்ட் சலாம் பட்டத்தை வென்றார் அதன் பின்னர் பல சர்வதேச போட்டிகளில் தனது ஆபரமான ஆட்டதிறமையின் மூலன் பல பட்டங்களை வென்றுள்ளார். இதுவரை மொத்தம் 20 கிராண்ட் சலாம் பட்டங்களை வென்றுள்ளார். டென்னிசில் போட்டியில் 20 கிராண்ட் சலாம் பாட்டங்களை வென்ற முதல் வீரர் என்ற பெருமை கொண்டவர் பெடரர்.
அதிக முறை கிராண்ட் சலாம் வென்ற வீரர்கள் பட்டியலில் பெடரர் 3வது இடத்தில்லுள்ளர். இவருக்கு முன்பு ஜோகோவிக் 2 ஆம் இடத்திலும், நடால் முதலிடத்திலும் உள்ளனர். இவரது ஓய்வு அறிக்கையில் அவர் கூறியதாவது, “ கடந்த சில ஆண்டுகளாக காயம் காரணமாக அறுவை சிகிச்சை போன்ற கடுமையான சூழல்கள் இருந்தன. இருந்தாலும் போட்டிக்காக உடற்தகுதி பெற மிக கடினமாக உழைத்தேன். ஆனால் எனது உடலின் ஒத்துழைப்பு மிக நீண்ட நாட்களாக எனக்கு கிடக்குமென்று தோன்றவில்லை. எனது உடல் கூறுவதை நான் கேட்க வேண்டும் “.
மேலும் எனது டென்னிஸ் வாழ்க்கையில் என்னோடு பயணித்த எனது மனைவி, தாய், சகோதரிகள், பயிற்சியாளர்கள், ரசிகர்கள், டென்னிஸ் நிர்வாகம், சக போட்டியாளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி. நீங்கள் இல்லாமல் இந்த வாழ்க்கை எனக்கு சாத்தியமில்லை என்று கூறினார். இந்த 24 வருட டென்னிஸ் வாழ்க்கை 24 மணிநேரம் போல கடந்து சென்றுவிட்டது. இந்த டென்னிஸ் வாழ்க்கையை நான் நேசிக்கிறேன் அதை நான் விலகுவாதில்லை என்றார்.
இவரது ஓய்வு முடிவு கூறித்து சக வீரர் நடால், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின், டென்னிஸ் ஜாம்பவான் செரீனா, உலகத்திலுள்ள தலை சிறந்த போட்டியாளர்கள், விளையாட்டு வீரர்கள், நாட்டு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.