ஆஷஸ்(Ashes) தொடரின் மூன்றாவது போட்டி ஹெட்டிங்லி மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 263 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக அந்த அணியின் பேட்ஸ்மேன் மார்ஷ் 118 ரன்கள் கடந்தார். இங்கிலாந்து அணி தரப்பில் வேகப் பந்து வீச்சாளர் மார்க் வுட்டின் அதி வேகப் பந்து வீச்சால் ஆஸ்திரேலியா நிலைக்குலைந்து 300 ரன்களுக்குள் ஆட்டமிழந்தது. தனது அதிரடி பந்து வீச்சின் மூலம் 5 விக்கெட்டை சாய்த்தார் வுட்.
திருப்பி கொடுத்த ஆஸ்ட்ரேலியா :
இந்த குறைந்த ரன்களை எப்படி சமாளிப்பது என ஆஸ்திரேலியா பந்து வீச்சை துவங்கியது. இங்கிலாந்து தனக்கு சாதகமான இந்த போட்டியை சிறப்பாக கையாண்டு, அதிரடி ஆட்டத்தை கொடுக்குமென ரசிகர்கள் ஆவலுடன் எதிர் நோக்கி இருந்தனர்.ஆனால் ஆஸ்திரேலியாவும் சிறப்பான பந்து வீச்சை கையிலெடுத்தது. இதனை சமாளிக்க துடுப்பாட்டம் விளையாட நினைத்த இங்கிலாந்து, சீரான இடைவெளியில் விக்கெட்டை பறிக்கொடுக்க துவங்கியது. அந்த அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மட்டுமே சற்று தாக்கு பிடித்து ஆடினார். மற்ற வீரர்கள் வந்த வேகத்தில் அவுட்டாகி பெவிலியன் சென்றனர். இறுதியில் இங்கிலாந்து அணி 237 ரங்களுக்கு சுருண்டது.
ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் கம்மின்ஸ் சிறப்பான பந்து வீச்சால் 5 விக்கெட்டை வீழ்த்தி இங்கிலாந்தை செயலிழிக்க செய்தார். இதனையடுத்து 26 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலிய தனது 2 வது இன்னிங்ஸை விளையாட ஆரம்பித்துள்ளது. 2 ஆம் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 142 முன்னிலை பெற்றுள்ளது. பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே தனது 100 வது டெஸ்ட் போட்டியில் விளையாடிய ஸ்டீவ் ஸ்மித் இரண்டு இன்னிங்ஸ்சிலும் சேர்த்து 24 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றம் அளித்துள்ளார்.
தாக்கு பிடிக்குமா இங்கிலாந்து? :
முந்தைய போட்டியில் முதல் இன்னிங்ஸ் முடிவதற்கே 3 நாட்கள் கடந்த நிலையில் இந்த போட்டியின் 2ஆம் நாள் முடிவிலே 2 வது இன்னிங்ஸ் தொடங்கி பாதி வரை சென்றுள்ளது. இரண்டு அணித் தரப்பிலும் மாறி மாறி சவாலான ஆட்டம் ஆடுகிறார்கள். 2019 ஆம் வருடம் இதே மைதானத்தில் தான் இறுதியில் பென் ஸ்டோக்ஸ் ஒற்றை ஆளாக நின்று அணியை வெற்றியடைய செய்தார்.
அதே போல இந்த போட்டியும் இங்கிலாந்து வசம் செல்லுமா அல்லது தொடர்ந்து 3 வது வெற்றியை பெற்று ஆஷஸ் தொடரை ஆஸ்திரேலியா கைப்பற்றுவார்களா என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது என்றே சொல்லலாம்.