கால் பந்து விளையாட்டின் நட்சத்திரமான கிறிஸ்டியானோ ரொனால்டோ மான்செஸ்டர் கிளப்பில் இருந்து விலகி தற்போது சவுதி அரேபியா நாட்டின் அல் நஸர் அணியின் இணைந்ததுள்ளார். இந்த அறிவிப்பை நேற்று அவர் தனது சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ளார்.
சமீப காலமாக ரொனால்டோ மான் செஸ்டர் அணியிலிருந்து விலகவுள்ளதாக செய்திகள் கசிந்தன. இருப்பினும் இது தொடர்பான அறிவிப்போ, அதிகாரப்பூர்வ தகவலோ எதுவும் வெளிவரவில்லை. நடந்து முடிந்த உலகக்கோப்பை தொடரின் நடுவே ரொனால்டோ சவுதி அரேபியாவின் அல் நசர் கிளப்பில் இணையபோவதாக தகவல் பரவின, உலகக்கோப்பை போட்டியின் போதே மைதானத்தில் ரசிகர்கள் அல் நஸர் கிளப்பிற்கு வருகை தரும் ரொனால்டோவிற்கு நன்றி என போஸ்டர் ஒட்டினர். இருப்பினும் அது போன்ற தகவல் எதுவும் இல்லை என்று ரொனால்டோ தரப்பில் கூறப்பட்டது.
ஆனால் நேற்று அல் நசர் கிளப்பின் நிர்வாக தலைவர் இதனை உறுதி செய்தார். ரொனால்டோவிற்கு அல் நஸர் கிளப்பின் ஆடையை அவர் கையில் கொடுத்து வரவேற்கும் புகைபடைத்தை வெளியிட்டு பதிவு ஒன்று வெளியிட்டனர். அதில், “அவர் கையெழுத்திட்டது எங்கள் கிளப்பை இன்னும் பெரிய வெற்றியை அடைய ஊக்குவிப்பது மட்டுமல்லாமல், எங்கள் லீக்கை ஊக்குவிக்கும்,நமது தேசம் மற்றும் வருங்கால சந்ததியினர், சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் தங்களைப் பற்றிய சிறந்த பதிப்பாக இருக்க வேண்டும். கிறிஸ்டியானோ, உங்களை அன்புடன் வரவேற்கிறோம்” . என்று பதிவிட்டனர்.
இதனை தொடர்ந்து ரொனால்டோவும், “அல் நசரின் பார்வை மிகவும் ஊக்கமளிக்கிறது மற்றும் ஈர்க்கக்கூடியது.வேறு நாட்டில் வித்தியாசமான லீக் அனுபவத்தை எதிர்பார்க்கிறேன்.கூடிய விரைவில் எனது அணி வீரர்களுடன் இணைவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்”. என்று கூறியுள்ளார். ரொனால்டோவிற்கு ஊதியமாக 72 மில்லியன் யூரோ முடிவு செய்ய பட்டுள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அவர் அல் நசர் அணியுடன் விளையாடவுள்ளார்.