ஜனவரி 1ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் சிலிண்டர் ரூ. 450 க்கு விற்பனை செய்யப்படும் என ராஜஸ்தான் முதல்வர் அறிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்று தற்போது ஆட்சி அமைத்துள்ளது. முன்னதாக தேர்தல் வாக்குறுதிகளில் ரூ. 450 க்கு சிலிண்டர் விநியோகம் செய்யப்படும் என்று உறுதி அளித்திருந்த பாஜக, தற்போது ஆட்சி அமைத்துள்ள நிலையில் சிலிண்டர் விலை குறைப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன் அப்படி வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல் சிலிண்டர் ரூ. 450 க்கு விற்பனை செய்யப்படும் என ராஜஸ்தான் முதல்வர் அறிவித்துள்ளார். அதன் படி உஜ்வாலா திட்டத்தின் கீழ் கேஸ் சிலிண்டர்கள் உபயோகப்படுத்தி வரும் பொதுமக்கள், தற்போது ரூ. 500க்கு சிலிண்டர்களை வாங்கி வருகிறார்கள்.
இதிலிருந்து ரூ. 50 குறைந்து ரூ. 450க்கு ஜனவரி 1ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
இந்த கூடுதல் மானிய தொகையானது பயனாளிகளின் வங்கி கணக்குகளுக்கு நேரடியாக செலுத்தப்படும் என்றும், தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் செயலாற்றும் நடைமுறை தற்போது தொடங்கியுள்ளதாகவும் முதல்வர் பஜன் லால் சர்மா தெரிவித்துள்ளார். அரசின் இந்த அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் பலத்த வரவேற்பு பெற்றுள்ளது.