ஆண்டுகளை கடந்து நடைபெற்று கொண்டிருக்கும் உக்ரைன் ரஷ்யா போரில் உக்ரைன் நாட்டில் உள்ள குழந்தைகள் மருத்துவமனை மீது ரஷ்யா கொடூர தாக்குதல் நடத்தி உள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சமீப காலமாக அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளுடன் உக்ரைன் நெருக்கம் காட்டி வருவதை விரும்பாத ரஷ்யா தனிநாடாக உருவான உக்ரைனை தன்னோடு இணைத்துக் கொள்ள முயன்று வருகிறது. இதன் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடித்து வந்தது. இந்த நிலையில் உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் போர் தொடுக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உத்தரவிட்டார்.
இதையடுத்து உக்ரைன் நாட்டின் மீது ரஷிய படைகள் தாக்க தொடங்கியது. பதிலுக்கு உக்ரைன் ராணுவமும் தாக்குதல் நடத்தியது.இந்த தாக்குதலில் இரு தரப்பிலும் பல ராணுவ வீரர்கள் பலியானதோடு பொது மக்களும் பலியாகினர்.
உக்ரைனில் ரஷ்யா நடத்தி வரும் போர்த் தாக்குதலால் ஏராளமான குழந்தைகள் உட்பட பொதுமக்கள் பலரும் உயிரிழந்துள்ளனர் . ஒருபக்கம் பல அப்பாவி உயிர்கள் மாண்டாலும் மறுக்கம் உக்ரைன் ரஷ்யா படைகள் மீது விடாது தாக்குதல் நடத்தி வருகிறது .
Also Read : மருங்கூர் அகழாய்வில் பழங்கால வட்டச்சில்லுகள் கண்டெடுப்பு..!!
ஆண்டுகள் பல கடந்தாலும் போரின் தாக்கம் மட்டும் குறையாமல் நடந்துகொண்டே இருக்கிறது. இதற்கிடையில் ரஷ்யா நாட்டில் உள்நாட்டு வன்முறைகளும் அதிகரித்து வருகின்றன .
இந்நிலையில் உக்ரைன் தலைநகர் கீவில் அமைந்துள்ள மருத்துவமனை மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் குழந்தைகள் உட்பட 41 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர்.
இந்த கொடூர தாக்குதலின்போது படுகாயமடைந்த 170க்கும் மேற்பட்டோர் அங்குள்ள மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
உக்ரைனின் அழகிய நகரங்கள் மீது ரஷ்யா அடுத்தடுத்து மனிதாபிமானமற்ற தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில் ரஷ்யாவின் கோபம் எப்போது தீர போகிறது என தெரியவில்லை என்றும் இந்த போர் எப்போது முடிந்து எப்போது உக்ரைனில் மீண்டும் இயல்பு நிலை எப்பொழுது வரும் என அந்நாட்டு மக்கள் கண்ணீருடன் காத்திருக்கின்றனர்.