டெங்கு காய்ச்சலால் அவதிப்பட்டு வரும் இளம் கிரிக்கெட் வீரர் ஷுப்மன் கில்லின் உடல் நலம் தேறி வர ஒரு வாரத்திற்கு மேல் ஆகும் என்பதால், அவருக்கு பதிலாக ருத்துராஜ் அல்லது யஷஸ்வி ஜெய்ஸ்வாலை உலக கோப்பை அணியில் சேர்க்க அணி நிர்வாகம் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது!
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியில் இடம்பெற்றுள்ள இளம் வீரர் ஷுப்மன் கில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
சிகிச்சையில் இருக்கும் ஷுப்மன் கில்லுக்கு பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் ஷுப்மன் கில் ஓய்வெடுத்து வருகிறார் . இதனால் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சில ஆட்டங்களில் அவர் விளையாடுவது சந்தேகம் என்ற சூழல் நிலவி வருகிறது .
இந்நிலையில் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்காக விளையாட முடியாமல் டெங்குவால் அவதிப்பட்டு வரும் இளம் கிரிக்கெட் வீரர் ஷுப்மன் கில்லின் உடல் நலம் தேறி வர ஒரு வாரத்திற்கு மேல் ஆகும் என்பதால், அவருக்கு பதிலாக ருத்துராஜ் அல்லது யஷஸ்வி ஜெய்ஸ்வாலை உலக கோப்பை அணியில் சேர்க்க அணி நிர்வாகம் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒருவேளை ஷுப்மன் கில் உலகக்கோப்பை தொடரில் விளையாட முடியாத நிலை நீடித்தால் நிச்சயம் மாற்று வீரர்களாக ருத்துராஜ் அல்லது யஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்திய அணியில் சேர்க்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது .
ஏன்னெனில் அண்மையில் நடைபெற்று முடிந்த ஆசிய விளையாட்டு போட்டியிலும் அதற்கு முன் நடந்த பல போட்டிகளிலும் வாய்ப்பு கிடைக்கும் போது இந்த இரு வீரர்களும் அவர்களது திறமைகளை உலகிற்கு காட்டியுள்ளனர்.