சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வரும் நவ.-15ம் தேதி திறக்கப்படும் என சபரிமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
2024ம் ஆண்டு மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நவம்பர் 15ம் தேதி திறக்கப்பட உள்ளது. மகரவிளக்கு பூஜை 2025 ஜனவரி 14ம் தேதி நடைபெறும் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
Also Read : சென்னையில் போலீசாரை ஆபாசமாக பேசிய போதை ஜோடி ஜாமின் கோரி நீதிமன்றத்தில் மனு..!!
மண்டல பூஜைக்காக கோயில் நடை நவம்பர் 15ம் தேதி திறக்கப்பட்டு டிசம்பர் 26ம் தேதி நடை சாத்தப்படும். மகரவிளக்கு பூஜைக்காக டிசம்பர் 30ம் தேதி திறக்கப்பட்டு அடுத்த ஆண்டு ஜனவரி 20ம் தேதி கோயில் நடை அடைக்கப்படும் என அறிவித்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் விசேஷ பூஜைகள் நடைபெற உள்ள நிலையில் கோவில் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கோயிலை சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் பணியில் ஈடுபட்டுள்ளனர்.