டெல்லியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த கோவை ஈஷா யோகா மையத்தின் நிறுவனரான (sadhguru) சத்குரு ஜக்கி வாசுதேவ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார் .
கடந்த சில வாரங்களாக கடும் தலைவலிக்கு உள்ளான சத்குருவிற்கு மார்ச் 17-ம் தேதி டெல்லியில் உள்ள பிரபல மருத்துவமனையான அப்போலோ மருத்துவமனையில் மூளை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது .
Also Read :https://itamiltv.com/50-lakh-robbery-in-a-vehicle-that-brought-cash-to-atm/
அறுவை சிகிச்சைக்கு பின் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வந்த சத்குருவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் கிடைத்து வந்தது.
இதுகுறித்து அப்போலோ மருத்துவர்கள் கூறுகையில் :
மிகவும் ஆபத்தான அறுவை சிகிச்சைக்குப் பிறகு, சத்குரு ஜக்கி வாசுதேவ்வின் உடல்நிலை நாங்கள் எதிர்பார்த்ததை விட மிக வேகமாக முன்னேறியது அவர் தற்போது நலமுடன் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர் .
இந்நிலையில் சுமார் 10 நாட்கள் மருத்துவச் சிகிச்சைக்குப் பின் (sadhguru) சத்குரு ஜக்கி வாசுதேவ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.