நீங்க தங்க நகை வாங்க போறிங்களா..? அப்டினா ஏப்ரல் ஒன்றாம் தேதியிலிருந்து தங்க நகை அல்லது தங்கத்தால் செய்யப்பட்ட பொருட்கள் வாங்கும் போது சில முக்கியமான விஷயங்களை (6 digit hallmark) கவனிக்க வேண்டியது மிகவும் அவசியம்.
அதாவது, தங்க நகைகள் வாங்கும் போது அதில் 6 டிஜிட் கொண்ட ஹால்மார்க் (6 digit hallmark) எண்கள் இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும் என மத்திய அரசு புதிய விதிமுறைகளை விதித்துள்ளனர்.
ஏப்ரல் 1ம் தேதியிலிருந்து இந்த 6 டிஜிட் ஹால்மார்க் எண்கள் இல்லாத தங்க நகைகள் மற்றும் தங்கத்தால் செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்வதற்கு நகை கடை உரிமையாளர்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளனர்.
இந்த விதிமுறையை பொருத்தவரை 2019 ல் மத்திய அரசு 2021 ஆம் ஆண்டிலிருந்து விற்பனை செய்யப்பட இருக்கும் தங்க நகைகள் மற்றும் தங்கத்தினால் செய்யப்பட்ட பொருட்களுக்கு 6 டிஜிட் ஹால்மார்க் எண்கள் இருப்பது கண்டிப்பாக அவசியம் என்றும் இல்லையென்றால், 2021 வருடத்திற்குப் பிறகு 6 டிஜிட் ஹால்மார்க் எண்கள் இல்லாத தங்க நகைகள் விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்படும் என்றும் அறிவித்திருந்தனர்.
இந்த நிலையில், கொரோனா காலகட்டம் போன்ற பல சூழ்நிலைகளால், இதற்கான காலக்கெடுவை நீடித்துக் கொண்டே இருந்தனர். இந்நிலையில், தற்போது இதை மீண்டும் ஏப்ரல் 1ம் தேதியிலிருந்து அமல்படுத்த போவதாக மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளனர்.
மேலும், 14, 18 மற்றும் 22 கேரட் கொண்ட தங்க நகைகளுக்கு இந்த 6 டிஜிட் ஹால்மார்க் எண் மிகவும் முக்கியம். இதற்கு முன்னதாக, பிஐஎஸ் ஹால்மார்க் முத்திரை இருக்கிறதா என்பதை நாம் கவனித்து பார்த்திருப்போம்.
ஆனால், இனி வரக்கூடிய நாட்களில், இந்த 6 டிஜிட் இருக்கிறதா என்பதை நாம் கவனிக்க வேண்டியது மிகவும் முக்கியமான ஒன்று.
பெரிய கடையாக இருந்தாலும் சரி, சிறிய கடையாக இருந்தாலும் சரி எல்லா கடைகளிலும் தங்க நகை என்பது நல்ல தரமான தங்க நகையாக விற்பனை செய்யப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்பதற்காக தான் மத்திய அரசு இந்த ஒரு முயற்சியை கையில் எடுத்திருக்கிறார்கள்.