16வது ஐபிஎல் சீசனுக்கான வீரர்களின் ஏலம் நேற்று கொச்சியில் நடைபெற்றது. இதில் சென்னை, மும்பை, கொல்கத்தா என மொத்தம் பத்து அணிகள் கலந்து கொண்டன மொத்தமாக 405 வீரர்கள் இந்த ஏலத்திற்கான பட்டியலில் இடம் பெற்றுனர். முதல் கட்டமாக பேட்ஸ்மேன் பின்னர் ஆல்ரவுண்டர் என வரிசையாகவும், பிரிவுகளாகவும் ஏலம் நடத்தப்பட்டது.
இந்த ஏலத்தில் இங்கிலாந்து ஆல்ரவுண்டரான சாம் கரன் தான் அதிகபட்சமான தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். இவரை பஞ்சாப் அணி 18.5 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது பஞ்சாப் அணி. ஐபிஎல் வரலாற்றில் இதுவரை நடந்த ஏலத்தில் அதிகபட்சமான தொகைக்கு வாங்கப்பட்ட என்ற பெயர் பெற்றார் சாம் கரன். இதற்கு முன்னதாக தென் ஆப்பிரிக்கா வீரர் க்ரிஸ் மோரிஸ், இந்திய வீரர் யுவராஜ் சிங் தான் 16 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டனர். ஆனால் தற்போது அந்த இலக்கை முறியடித்தார் சாம் கரன்.
இவரை போன்று ஆஸ்திரேலியா அணியின் ஆல் ரவுண்டான கேமரா கிரீன் 17.5 கோடி ரூபாய்க்கு மும்பை அணியால் வாங்கப்பட்டார். சாம் கரனுக்கு அடுத்த அதிக விலைக்கு வாங்கபட்ட வீரர் இவர் தான். இவரை தொடர்ந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வீரரான பெண் ஸ்டோக்ஸ் 16.75 கோடி ரூபாய்க்கு சென்னை அணியால் வாங்கப்பட்டார். இந்த ஐபிஎல் தொடரில் இவர் தான் அதிக தொகைக்கு எடுக்கப்படுவார் என எதிர்பார்க்கபட்டார். மேலும் சிஎஸ்கே அணியின் ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது பென் ஸ்டோக்ஸ் தான். இதற்கு முன்னதாக எந்த வீரரும் இவ்வளவு தொகை கொடுத்து எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.