நடிகை சமந்தாவிற்கு ( samantha ruth prabhu ) தற்போது அரியவகை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை சமந்தா பதிவிட்டுள்ளார்.அந்த பதிவில் தனக்கு மயோசைட்டிஸ்’ எனப்படும் தசை அழற்சி நோய் ஏற்பட்டுள்ளதாகவும் இந்த நோய் குணமாக எதிர்பார்த்ததை விட அதிக நாட்கள் ஆகும் போல் தெரிகிறது என்று சமந்தா உருக்கமாக தெரிவித்துள்ளார்.
நோய் பாதிப்பில் தான் போராடி வருவதாகவும்,இதன் மூலம் மோசமான நாட்களை எதிர்கொண்டு இருக்கிறேன் என்றும் விரைவில் குணமடைவேன் என்ற நம்பிக்கை உள்ளது என சமந்தா தெரிவித்துள்ளார்.சமந்தா குணமடைய அவர்களுடைய ரசிகர்கள் தற்போது சமூக வலைதளத்தில் சமந்தாவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
மேலும் இந்த பதிவோடு இணைத்து சமந்தா குளுக்கோஸ் ஏற்றிக்கொண்டு தான் நடித்த யசோதா திரைப்படத்திற்கு டப்பிங் பேசும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.