தமிழ்நாட்டில் நடந்த மக்களவைத் தேர்தலின் வாக்குப்பதிவு சதவீதத்தை அறிவித்ததில் ஏற்பட்ட குளறுபடி குறித்து (Satya Prata Sahu) தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு தற்போது விளக்கம் கொடுத்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சத்யபிரதா சாஹு கூறியதாவது :
செயலியில் கிடைத்த தகவல் அடிப்படையில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் கணக்கிட்டதால் குளறுபடி ஏற்பட்டது.
செயலியில் வாக்குச்சாவடி அலுவலர்கள் கட்டாயம் பதிவு செய்ய எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை; வாக்கு சதவீதத்தை ஒருசிலர் மட்டுமே செயலியில் பதிவிட்டதால் கணக்கீட்டில் குளறுபடி ஏற்பட்டுள்ளது.
தேர்தல் நடத்தும் அதிகாரி கையெழுத்து போட்டு கொடுக்கும் தகவல் வர கால தாமதம் ஆகும் என்பதால் செயலி மூலமாக அப்டேட் செய்தோம்.
Also Read : தமிழ்நாட்டை போதைப் பாதையில் அழைத்துச் செல்லும் தி.மு.க. அரசு – ஓபிஎஸ்
.வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் குறித்து அக்டோபர் மாதமே அரசியல் கட்சிகளுக்கு தகவல் தரப்பட்டது.
வாக்காளர் பெயர் விடுபட்டது தொடர்பாக Case by Case விசாரணை நடத்த வேண்டும்.
வாக்காளர் பட்டியல் தொடர்பாக வாராவாரம் அரசியல் கட்சிகளுடன் ஆய்வு கூட்டம் நடைபெறும்.
வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க, சரிபார்க்க பல்வேறு வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.
ஒரு வாக்காளர் நீண்ட காலமாக அவரது முகவரியில் இல்லாவிட்டால் பட்டியலில் பெயர் இல்லாமல் போகலாம்.
1996ல் தரப்பட்ட வாக்காளர் அடையாள அட்டை (Satya Prata Sahu) செல்லுபடியாகும்; புதிய அட்டைதான் தேவையென்று இல்லை என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.