வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை சென்னை அருகே கரையை கடந்த நிலையில் சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் பள்ளிகள் இன்று வழக்கம்போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அதி கனமழை பெய்யக்கூடும் என ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
Also Read : சென்னைக்கு வடக்கே கரையைக் கடந்தது காற்றழுத்த தாழ்வு மண்டலம்..!!
இதுமட்டுமின்றி விடாது பெய்த கனமழையால் கடந்த 2 நாட்களாக இந்த நான்கு மாவட்டங்களுக்கும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் கனமழைகான குறைந்ததால் ரெட் அலெர்ட் எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்ததையடுத்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.