சன் பிக்சர்ஸ் நிறுவனம், “ஜெயிலர்” பட ஷூட்டிங்கில் மோகன்லால் (mohanlal) கலந்துகொண்டபோது எடுத்த புகைப்படத்தைப் பகிர்ந்து, அவர் ரஜினியுடன் இணைந்து நடிப்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
இயக்குனர் நெல்சன் திலீப்குமார், “கோலமாவு கோகிலா”, “டாக்டர்”, “பீஸ்ட்” படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார், அடுத்ததாக ரஜினிகாந்த் நாயகனாக நடிக்கும் “ஜெயிலர்” திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
மேலும், இப்படத்தில் நடிகர் ரஜினி, முத்துவேல் பாண்டியன் என்கிற கெத்தான கேரக்டரில் நடித்து வரும் நிலையில், அவருக்கு ஜோடியாக நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார். இதுதவிர வஸந்த் ரவி, யோகிபாபு, ரோபோ சங்கர் ஆகியோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
மேலும், ஜெயிலர் படத்தில், கன்னட சூப்பர்ஸ்டார் ஷிவ ராஜ்குமார் வில்லனாக நடித்து வருகிறார். அனிருத் இசையமைத்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இதுவரை 65 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இந்நிலையில், “ஜெயிலர்” பட ஷூட்டிங்கில் மோகன்லால் (mohanlal) கலந்துகொண்டபோது எடுத்த புகைப்படத்தைப் பகிர்ந்து, அவர் ரஜினியுடன் இணைந்து நடிக்கும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை நேற்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டு இருந்தது.
நடிகர் ரஜினியும், மோகன்லாலும் நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும், அவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் முதல் படம் ஜெயிலர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், அந்த புகைப்படத்தில் மோகன்லால் ரெட்ரோ லுக்கில் இருக்கிறார். அதைப்பார்க்கும் போது மோகன்லால் இப்படத்தின் பிளாஷ்பேக் காட்சிகளில் நடித்து வருவது போல் தெரிகிறது.
இந்நிலையில், மோகன்லாலின் ரெட்ரோ லுக்கே இவ்ளோ மாஸா இருக்குன்னா, அப்போ தலைவரோட லுக் வேறலெவல்ல இருக்கும் போலயே என ரசிகர்கள், கமெண்ட் செய்து வருகின்றனர்.