திருமணம் செய்வதாக கூறி இளம் பெண்களை ஏமாற்றி பணம் நகை மோசடி செய்த பாஜக இளைஞர் அணி செயலாளர் தமிழரசன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை, தாம்பரம் அருகே திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி 50 லட்சம் ரூபாய் பணம், 15 சவரன் தங்க நகைகளை பறித்துக் கொண்டதோடு, தனிமையில் இருந்த வீடியோவை காட்டி மிரட்டுவதாக பெண் அளித்த புகாரில் பாஜக இளைஞர் அணி செயலாளர் தமிழரசன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர் .
Also Read : பெரியாரை உலகமே ஏற்றாலும் நான் ஏற்க மாட்டேன் – சீமான் பரபரப்பு பேட்டி..!!
தமிழரசனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட செல்போன் மற்றும் லேப்டாப்பை சோதனை செய்தபோது அதில் 10க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாச வீடியோக்கள் இருப்பது தெரியவந்ததாக சிட்லபாக்கம் மகளிர் காவல் நிலைய போலீசார் தெரிவித்துள்ளனர் .
இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தமிழரசனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்து அவனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் .