அதிமுகவுடன் கூட்டுசேர அக்கட்சியின் பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி தன்னை அழைத்ததாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி ஒன்றில் கூறிருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் அதற்கான முன்னேற்பாடுகளை தற்போது தீவிரமாக செய்து வருகின்றனர். தமிழ்நாட்டை பொறுத்தவரையில் இருபெரும் கட்சிகளான திமுக மற்றும் அதிமுக தலைமையில் கூட்டணிக்கான பேச்சுவார்த்தைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் சில கடுமையான விமர்சனங்களால் கோபம் கொண்ட அதிமுக தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலக்கியத்துடன் இனி எப்போதும் பாஜகவுடன் கூட்டணி வைக்கப்போவதில்லை என பகிரங்கமாக அறிவித்தது.

அதிகமுகவின் இந்த முடிவுக்கு பலர் ஆதரவு தெரிவித்தும் சிலர் கண்டனம் தெரிவித்தும் இணையத்தில் பெரும் வாக்குவாதம் நடைபெற்றது .
இந்நிலையில் அதிமுகவுடன் கூட்டுசேர அக்கட்சியின் பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி தன்னை அழைத்ததாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி ஒன்றில் கூறிருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று செய்தியாளர்களை சந்தித்த சீமான் இதுகுறித்து கூறியதாவது :
அதிமுகவுடனான கூட்டணி குறித்து என்னை எடப்பாடி பழனிசாமி அழைத்து பேசினார். அப்போது, கூட்டணிக்கு நான் வர முடியாது, என் கொள்கை முடிவு இதுதான் என எடப்பாடி பழனிசாமியிடம் தான் தெகிவாக தெரிவித்தாக சீமான் கூறியுள்ளார் .
அதிமுகவும் பாஜகவும் தற்போது புதிய கூட்டணியமைக்க தீவிரமாக ஆயுத்தமாகி வரும் முலையில் எடப்பாடி பழனிசாமி தன்னை கூட்டணிக்கு அழைத்ததாக சீமான் கூறியுள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.