பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தற்போது பாகிஸ்தானுடன் இருக்கும் கராச்சியில் 8 நவம்பர் 1927 ஆம் ஆண்டு பிறந்தவர் லால் கிருஷ்ண அத்வானி .
இந்தியப் பிரிவினையின் போது இந்தியாவுக்கு குடிபெயர்ந்த இவர் இன்று மும்பை என்று அழைக்கப்படும் பம்பாயில் குடியேறினார் .
இதையடுத்து மக்களுக்கு சேவை செய்ய அரசியலில் கால்பதித்த இவர் ஏறுமுகம் காண இவரை முன்னுதாரணமாக வைத்து ஏராளமானோர் அப்போது மக்கள் பணியாற்ற அரசியலில் இணைந்தனர்.
Also Read : வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா பலத்த பாதுகாப்புடன் ரகசிய இடத்தில் தங்க வைப்பு..!!
இந்நிலையில் வயது முதிர்வு காரணமாக அரசியலில் இருந்து விலகி வீட்டில் ஓய்வு எடுத்து வரும் பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி உடல்நலக்குறைவு காரணமாக தற்போது டெல்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அப்பல்லோ மருத்துவமனையில் எல்.கே.அத்வானியின் உடல்நிலையை நரம்பியல் மருத்துவ நிபுணர் கவனித்து வருகிறார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள எல்.கே.அத்வானியின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.