முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் இன்று ஜாமின் வழங்கிய நிலையில் 471 நாட்கள் சிறைவாசத்திற்குப் பிறகு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியே வந்துள்ளார்.
சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி அமலாக்கத்துறையால் கடந்தாண்டு ஜூன் மாதம் 14ம் தேதி கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து சுமார் 15 மாதங்கள் சிறையில் இருந்த செந்தில் பாலாஜி தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு ஜாமின் கோரி பலமுறை நீதிமன்றத்தை நாடினார் இருப்பினம் அவருக்கு ஜாமின் கிடைக்காமல் 58 முறைகள் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டது .
இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் ஜாமின் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் இந்த வழக்கின் மீது உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது .
உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ் ஓகா, அகஸ்டின் ஜார்ஜ் அமர்வு செந்தில் பாலாஜிக்கு 6 முக்கிய நிபந்தனைகளுடன் கூடிய ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து சுமார் சுமார் 471 நாட்கள் சிறையில் இருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை புழல் சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்துள்ளார்.
சிறையில் இருந்து வெளியில் வந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திமுக தொண்டர்கள் மற்றும் செந்தியில் பாலாஜியின் ஆதரவாளர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.