அமைச்சர் செந்தில் பாலாஜி தடைகள் பல கடந்து மீண்டும் ComeBack கொடுத்துள்ளார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
கோவை அனுப்பர்பாளையத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நூலகம், அறிவியல் மையத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார், ரூ.300 கோடி மதிப்பீட்டில் 8 தளங்களுடன் 1,98,000 சதுர அடி பரப்பளவில் நூலகம் மற்றும் அறிவியல் மையம் அமையவுள்ளது.
Also Read : எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்..!!
இதையடுத்து விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது :
கோவையில் டைடல் பார்க் அருகில் மேலும் ஒரு தகவல் தொழில் பூங்கா அமைக்கப்படும்; அவினாசி சாலையில் உள்ள உயர்மட்ட மேம்பாலம், சின்னியம்பாளையம் முதல் நீலாம்பூர் வரை நீடிக்கப்படும்.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் வேகமான செயல்பாடுகளை பார்த்து தடைகளை ஏற்படுத்தினர் ஆனால் தடைகளை உடைத்து மீண்டு வந்திருக்கிறார். “ComeBack கொடுத்திருக்கிறார் செந்தில் பாலாஜி”. தொடர்ந்து கோவைக்காக சிறப்பாக செயல்படுவார் செந்தில் பாலாஜி. அது உறுதி என முதல்வர் ஸ்டாலின் கூறினார் .