அமலாக்கத்துறை கைது செய்து, கைதி எண் கொடுக்கப்பட்டவர் எப்படி அமைச்சராக தொடர முடியும் சட்டப்படி செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வதற்கு எந்த ஒரு தகுதியும் இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார் .
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது ::
ஊழல் வழக்கில் சிக்கி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு ,புழல் சிறையின் கைதி எண் செந்தில் பாலாஜிக்கு கொடுக்கப்பட்டுள்ளது .
அமலாக்கத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் அவர் எப்படி அமைச்சராக தொடர முடியும் . சட்டப்படி செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வதற்கு எந்த ஒரு தகுதியும் இல்லை.
செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்பதே எங்களது கருத்து என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார் .
மாமன்னன் திரைப்படம் குறித்து எழுபட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் கூறியதாவது :
“மாமன்னன் சுத்த ஃப்ளாப் படம்;
திமுகவினர் மட்டும் தான் அந்த திரைப்படத்தை சென்று பார்க்கிறார்கள்” என கூறினார்.