சட்ட விரோத பணப் பரிவர்த்தனை தடைச் சட்டத்தில் கைதாகி சிறையில் உள்ள செந்தில் பாலாஜி, இலாக்கா இல்லாதா அமைச்சராக இருந்து வந்த நிலையில் தற்போது தனது TNMinister பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக பதவி வகித்து வந்த TNMinister செந்தில் பாலாஜி அமைலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு பின்னர் நெஞ்சு வலி காரணமாக மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து அவருக்கு இருதயத்தில் அடைப்பு இருந்ததை அறிந்துகொண்ட மருத்துவர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய அறிவுறுத்தினார்.
அதன்படி அவருக்கு தனியார் மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
அறுவை சிகிச்சைக்கு பின் புழல் சிறையில் அடைக்கப்பட்ட செந்தில் பாலாஜி அங்கு மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனிடையே செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 17வது முறையாக, நீட்டிக்கப்பட்டது. இதேபோல் செந்தில் பாலாஜி,
ஜாமீன் கேட்டு 3-வது முறையாக மனுதாக்கல் செய்திருந்த நிலையில், அவருக்கு ஜாமீனும் மறுக்கப்பட்டது .
பின்னர் மின்சாரத்துறையை அமைச்சர் தங்கம் தென்னரசுக்கும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையை முத்துசாமிக்கும் ஒப்படைத்து,
செந்தில் பாலாஜியை இலாக்கா இல்லாத அமைச்சராக அமைச்சரவையில் தொடர முதலமைச்சர் ஸ்டாலின் பரிந்துரைத்திருந்தார்.
இந்த நிலையில், செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் .
இலாகா இல்லாத அமைச்சராக நீடித்து வந்த நிலையில் பதவிவிலகல் கடிதத்தை அனுப்பியுள்ளார்.
செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் ஜாமின் மனுக்கள் அடுத்தடுத்து தள்ளுபடி செய்யப்பட்டன. இந்த நிலையில், செந்தில் பாலாஜி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் .
6 மாதங்களாக சிறையில் இருந்துக்கொண்டு அமைச்சராக இருப்பதாலேயே அவரது ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுவதாக நீதிமன்றங்கள் தொடர்ந்து தெரிவித்து வந்தன.
Also Read : https://itamiltv.com/government-is-not-interested-in-maintaining-social-justice/
மக்களவை தேர்தலுக்கு முன்பு ஜாமீன் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே, தனது அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .
இந்நிலையில் நீண்ட நாட்களாக புழல் சிறையில் அடைபட்டு கிடைக்கும் செந்தில் பாலாஜிக்கு இனியாவது இனியவாது நீதி மன்றம் ஜாமீன் கொடுக்க சம்மதம் கொடுக்குமா என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.