அமைச்சர் செந்தில் பாலாஜியின் (Senthil Balaji prision) நீதிமன்றக் காவலை ஜன 11ம் தேதி வரை நீட்டித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது .
பின்னர் இது குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் பல மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் இரண்டு மாதங்களில் வழக்கை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது .
இதையடுத்து கடந்த ஜூன் மாதம் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தி அவரை நள்ளிரவில் கைது செய்தது.
அப்போது திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதற்கிடையில் அவரிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்ததை தொடர்ந்து, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி அளித்தது.
செந்தில் பாலாஜியிடம் ஐந்து நாட்கள் விசாரணை நடத்தினர். அதன்பின்னர் மீண்டும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
Also Read : https://itamiltv.com/woman-killed-in-car-accident-near-chennai/
செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கை எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த சூழல் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில், சிறையில் இருந்தபடியே காணொளி மூலம் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டார் .
இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை ஜன 11ம் தேதி வரை நீட்டித்து எம்.பி., எம்.எல்.ஏ. சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதற்கிடையே ஜாமீன் கேட்டு அமைச்சர் செந்தில்பாலாஜி (Senthil Balaji prision) தரப்பில் பல முறை மனு தாக்கல் செய்த நிலையில் அவருக்கு ஜாமின் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது .