அமைச்சர் செந்தில் பாலாஜியை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை அடித்து புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த செந்தில் பாலாஜியை கஸ்டடியில் எடுத்து விசாரித்து வருகிறது .
தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான பல இடங்களில் அடுத்தடுத்த ரெய்டுகளால் அதிர வைத்த அமலாக்கத்துறை . சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தது .
இதையடுத்து தீடீர் நெஞ்சுவலியால் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட செந்திபாலாஜிக்கு தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது . அறுவைக்கு சிகைச்சைக்கு பின் அமலாக்கத்துறை கட்டுப்பாட்டில் இருந்த செந்தில் பாலாஜி தற்போது புழல் சிறையில் உள்ள A பிரிவு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் .
தமிழக அரசியலில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்திய இந்த வழக்கில் செந்தில் பாலாஜி மற்றும் அவரது மனைவி மேகலா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில் , நீதிபதிகள் போபண்ணா , எம் எம் சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு மனுவை விசாரித்து வந்தது.
இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் மேல்முறையீட்டு மனுவை நேற்று தள்ளுபடி செய்து தீர்பளித்துள்ள உச்சநீதிமன்றம். அமைச்சர் செந்தில் பாலாஜியை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்க துறைக்கு அனுமதி வழங்கியுள்ளது.
இதையடுத்து புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த செந்தில் பாலாஜியை பெற்று இரவு கஸ்டடியில் எடுத்த அமலாக்கத்துறையினர் அவரை விசாரணைக்காக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனுக்கு அழைத்து வந்தனர் .
இந்நிலையில் அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விடிய விடிய விசாரணை நடத்தியதாகவும் அவரின் உடல்நிலையை கருத்தில் கொண்டு விசாரணை இடையே அவருக்கு சிறிது ஓய்வு தந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது .