உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அமைச்சர் செந்தில்பாலாஜி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு மீண்டும் புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் கடந்த ஜூன் 15-ஆம் தேதி அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு, தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் .
அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு அவருக்கு இதய அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது . இதையடுத்து தற்போது புழல் சிறையில் உள்ள முதல் வகுப்பில் அமைச்சர் செந்தில் பாலாஜி அடைக்கப்பட்டிருக்கும் நிலையில் அவருக்கு உரிய மருத்துவ வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டார் . அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை கொடுப்பட்டு வந்த நிலையில் ஓமந்தூரார் உயர் சிறப்பு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் அங்கு அவர்க்கு உயர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த நவ.15ஆம் தேதி உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று காலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு மீண்டும் புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இதற்கிடையில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் நீதிமன்றக் காவலை டிச.15 வரை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நீடித்தது குறிப்பிடத்தக்கது.