கிருஷ்ணகிரி பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் மேலும் ஒரு நாதக முன்னாள் நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி அருகே உள்ள பள்ளியில் கல்வி பயின்று வந்த 12 வயது பள்ளி மாணவி என்.சி.சி பயிற்சி முகாமிற்கு சென்றபோது அங்கு என்.சி.சி. பயிற்சியாளராக இருந்த நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகியான சிவராமன் அந்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் .
Also Read : “ஓடவும் இல்லை ஒளியவும் இல்லை” விசாரணைக்கு ஒத்துழைப்பேன்- மகாவிஷ்ணு
இதையடுத்து மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தனியார் பள்ளி தாளாளர், தலைமை ஆசிரியர், வகுப்பு ஆசிரியர் உள்ளிட்ட 7 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான சிவராமன் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் தற்கொலை செய்துகொண்டார்.
இதையடுத்து இந்த வழக்கில் மேலும் ஒரு நாதக முன்னாள் நிர்வாகியான கருணாகரன் கைது செய்யப்பட்டுள்ளார் . இந்த வழக்கில் கைதாகி உயிரை மாய்த்துக்கொண்ட நாதக முன்னாள் நிர்வாகி சிவராமனுக்கு உடந்தையாக இருந்துள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .