ஷாருக்கானின் நடிப்பில் உருவாகியுள்ள டன்கி படத்தின் ட்ரைலர் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியான நிலையில் தற்போது வரை யூடூப் ரெண்டிங்கில் முதலிடம் வகித்து வருகிறது.
ஜவான் என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த பின் ஷாருக்கானை அடுத்த பிரம்மாண்ட படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் தான் ‘டன்கி’.
இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி இயக்கும் இந்த படத்தின் ஷாருக்கானுக்கு ஜோடியாக டாப்சி நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து சதீஷ் ஷா, விக்கி கௌஷல், தியா மிர்சா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் இந்த படத்தின் டிரைலரும் வெளியானது .
டீசரை போல் ட்ரைலருக்கும் நல்ல வரவேற்பை கொடுத்த ரசிகர்களால் தற்போது இந்த படத்தின் ட்ரைலர் யூடூப் ரெண்டிங்கில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது.