அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நெஞ்சுவலி காரணமாக தற்போது சென்னை ஒமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைது குறித்து அமலாக்கத்துறை விளக்கம் கொடுத்துள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது குறித்து விளக்கம் கொடுத்துள்ள அமலாக்கத்துறை கூறியதாவது :
அமைச்சர் செந்தில்பாலாஜி வருமானவரித்துறை தாக்கலில் தெரிவித்ததை விட வங்கிக் கணக்கில் உள்ள பணம் மிக அதிகம் உள்ளது சந்தேகத்தின் பேரில் செந்தில்பாலாஜி வங்கிக்கணக்கை ஆய்வு செய்ததில் 1.34 கோடி ரூபாய் இருப்பது தெரியவந்துள்ளது.
செந்தில்பாலாஜி மனைவி மேகலா பெயரில் வங்கியில் 29.55 லட்சம் ரூபாய் டெபாசிட்டாகி இருக்கிறது. பலமுறை விசாரணைக்கு அழைத்தும் செந்தில்பாலாஜி வரவில்லை காரணமே இல்லாமல் வாய்தா வாங்கி வந்தார் .
செந்தில்பாலாஜி குடும்பத்தினருக்கு தொடர்புடைய ரூ.25 கோடி மதிப்புள்ள பினாமி சொத்துக்கள் கண்டறியப்பட்டுள்ளன ரூ.25 கோடி மதிப்புள்ள நிலம் செந்தில்பாலாஜியின் பினாமிக்கு ரூ.10.88 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது .
அமைச்சர் செந்தில்பாலாஜி சட்டவிரோதமாக சம்பாதித்த பணம் நிலம் வாங்க பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .