உலககெங்கும் உள்ள மக்கள் பெரும்பாலானோர் மிகவும் எளிமையான Password வைத்து வருவதாக அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
உலகம் முழுவதிலும் அதிகமாக பயன்படுத்தும் PASSWORD ‘123456’ எனவும் இந்தியாவில் சுமார் 3,018,050 பேர் அதனை PASSWORD-ஆக வைத்துள்ளதாகவும் NORDPASS நிறுவனம் நடத்திய ஆய்வில் தகவல் வெளியாகி உள்ளது.
Also Read : சீனாவில் ரிலீசாகும் மக்கள் செல்வனின் மகாராஜா திரைப்படம்..!!
இதற்கு அடுத்தபடியாக PASSWORD என்ற வார்த்தையையே PASSWORD-ஆக பலர் வைத்துள்ளதும் தெரியவந்துள்ளது. 44 நாடுகளில் நடத்தப்பட்ட இந்த மாபெரும் ஆய்வில் ஒரு நொடிக்குள் பலரின் PASSWORD-ஐ CRACK செய்ய முடிவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது அனைவரது மத்தியிலும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
எனவே மக்களே இனியாவது யாரும் நீங்கள் வைக்கும் பாஸ்வர்டை தெரிந்துகொள்ள முடியாத வைகையிலும் யாரும் எளிதில் கிராக் செய்ய முடியாத வகையிலும் சற்று கடினமாக வைத்து பழகுங்கள்.