சென்னை பள்ளிக்கரணையில் நேற்று முன்தினம் சாதி மறுப்பு திருமணம் (Shocking twist) செய்த பிரவீன் என்ற இளைஞர் கொடூரமாக வெட்டி கொலைசெய்யப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது .
சென்னையை சேர்ந்த பிரவீன் என்ற இளைஞரும் ஷர்மி என்ற இளம் இளம்பெண்ணும் பள்ளி பருவத்தில் இருந்தே காதலித்து வந்துள்ளனர் .
இந்நிலையில் இவர்களது காதல் விவகாரம் இருவர் வீட்டுக்கும் தெரியவர அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
பின்னர் பெற்றோர்களை எதிர்த்து இருவரும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டு தனியாக வாழ்ந்து வந்துள்ளனர் .
இந்த திருமணம் இரு வீட்டார் இடையே பெரும் கோபத்தை ஏற்படுத்த பிரவீனை எப்படியாவது கொல்ல வேண்டும் என பெண்ணின் சகோதரரான தினேஷ் திட்டம் தீட்டி வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்றிரவு பிரவீனை சுத்துப்போட்ட தினேஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் பிரவீனை துடிக்க துடிக்க உயிர் போகும் வரை வெட்டி கொன்றுள்ளனர் .
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பிரவீனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து இந்த கொலை குறித்து வழக்கு பதிந்த போலீசார் பிரவீனை கொடூரமாக ஆணவக் கொலை செய்த ஷர்மியின் அண்ணன் தினேஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் 4 பேரை தேடி வந்தனர்.
சென்னை பள்ளிக்கரணை பகுதியில் நடந்த ஆணவக் கொலை சம்பவத்தில் பெண்ணின் சகோதரன் தினேஷ் உள்பட 5 பேர் போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டையில் கைது செய்யப்பட்டுள்ளனர் .
இந்த கொலை , SC/ST வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தரப்பில் முதற் கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் இந்த கொலை வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது ஏற்கனவே கொலை வழக்கு ஒன்றில் பிரவீன் சிறைக்கு சென்றுள்ளாராம். இவருக்கு முன் போகும் இருப்பது போல தெரிகிறது.
Also Read :https://itamiltv.com/internet-service-again-in-haryana-state/
இதனை அறிந்த சர்மியின் சகோதரர் பிரவீனின் எதிரிகளுடன் (Shocking twist) கூட்டு சேர்ந்து திட்டம் தீட்டிய இந்த கொலையினை செய்திருப்பதாக தெரியவந்துள்ளது.
தங்கையின் கணவன் என்றும் பாராமல் நடுரோட்டில் பிரவீன் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.