லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ படத்தில் பிரபல தென்னிந்திய நடிகை ஸ்ருதிஹாசன் நடிக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் ‘கூலி’ படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். சன்பிக்சர்ஸ் இப்படத்தை தயாரிக்கும் நிலையில், படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மேலும், படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் பல முன்னை நடிகர் நடிகைகள் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது . இந்நிலையில் இப்படத்தில் நடிக்க இருக்கும் நட்சத்திரங்களின் போஸ்டர்களை படக்குழு ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகிறது .
Also Read : வசூல் வேட்டை நடத்தும் ‘டிமான்ட்டி காலனி 2’ – படக்குழு வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல்..!!
இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள போஸ்டரில் ப்ளாக் அன்ட் வொயிட்டில் மாஸான லுக்கில் நடிகை ஸ்ருதிஹாசன் இருக்கும் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு கூலி படத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் படக்குழு உறுதி செய்துள்ளது .
படத்தில் ஸ்ருதி ஹாசன் ப்ரீத்தி என்னும் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ள நிலையில் அவருக்கு தற்போது வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது .
முன்னதாக இப்படத்தில் சவுபின் ஷாயிரின் மற்றும் நாகர்ஜுனா இருக்கும் கதாபாத்திரங்களில் போஸ்டர் வெளியாகி இருந்த நிலையில் தற்போது ஸ்ருதிஹாசனின் போஸ்டரும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது .