திரையரங்குகளில் பல வாரங்கள் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் அமரன் திரைப்படம் தற்போது 300 கோடி வசூலை தாண்டி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் அதிரடியாக உருவான திரைப்படமே அமரன் . சிவகார்த்திகேயன் , சாய் பல்லவி உள்ளிட்ட பல இளம் நட்சத்திரங்களின் மிடுக்கான நடிப்பில் தயாரான இந்த படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த மாதம் 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது .
இப்படம் வெளியான நாள் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் படத்தின் வசூலும் நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே செல்கிறது . அந்தவகையில் தற்போது இப்படத்தின் லேட்டஸ்ட் வசூல் விவரத்தை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது .
அதன்படி இப்படம் உலகளவில் 300 வசூலை தாண்டி உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.