மறைத்த நடிகரும் தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்தின் (Captain memorial ) நினைவிடத்தில் நடிகர்கள் சிவகுமார் மற்றும் கார்த்தி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
நடிகரும் தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த்திற்கு நுரையீரல் அழற்சி காரணமாக தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி கடந்த ஆண்டு டிசம்பர் 28 ஆம் தேதி காலை உயிரிழந்தார்.
சினிமா அரசியல் என இரண்டிலும் முடிசூடா மன்னனாக இருந்து வந்த கேப்டன் விஜயகாந்தின் மரண செய்தி கேட்டு தமிழகமே சோக கடலில் மூழ்கியுள்ளது.
இதையடுத்து கேப்டனின் உடலுக்கு நடிகர்கள், அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் என பலரும் நேரில் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து அடுத்த நாள் டிசம்பர் 29 ஆம் தேதி மாலை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் கேப்டன் விஜயகாந்த்தின் உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
Also Read : https://itamiltv.com/isro-launches-satellite-on-spacex-rocket/
இந்நிலையில் விஜயகாந்தின் நினைவிடத்தில் தற்போது அவரது ரசிகர்கள் தொண்டகர் மற்றும் அரசியல் தலைவர்கள் திரை பிரபலங்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அந்தவகையில் இன்று நடிகர்கள் சிவகுமார் மற்றும் கார்த்தி ஆகியோர் விஜயகாந்தின் (Captain memorial ) நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த நடிகர் கார்த்தி கூறியதாவது :
கேப்டனுக்கு இறுதி மரியாதை செலுத்த முடியாதது எனது வாழ்நாள் முழுவதும் குறையாகவே இருக்கும். தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் வரும் ஜன 19ஆம் தேதி கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு இரங்கல் கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.
நடிகர் சங்கத்தில் பெரிய சவால்கள் வரும்போது எல்லாம் நாங்கள் அனைவரும் நினைத்துக் கொள்ளக்கூடிய ஒரு மனிதராக கேப்டன் திகழ்ந்தார் .
கேப்டனின் தைரியத்தையும் நேர்மையையும் பின்பற்றி அவரது வழியிலேயே செல்ல முயல்வோம் என நடிகர் கார்த்தி தெரிவித்தார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சிவகுமார் கூறியதாவது :
தமிழக அரசியலில் எம்.ஜி.ஆரை அடுத்து நம்பிக்கையான ஒரு தலைவராக உருவாகிக் கொண்டருந்தவர். கலையுலகம், அரசியல் உலகம் ஒரு நல்ல மனிதரை இழந்துவிட்டது.
தமிழ்நாடு முதல்வராக இருந்திருந்தால் தமிழகத்தில் பல மாற்றங்களை செய்திருப்பார் . முதமைச்சர் ஆககூடிய அணைத்து தகுதிகளும் அவருக்கு உண்டு என நடிகர் சிவகுமார் தெரிவித்தார் .