இந்தியா – ஆஸ்ட்ரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் தொடரின் 3வது டெஸ்ட் போட்டி நடந்து முடிந்துள்ளது. தொடர்ந்து இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மிக மோசமான பேட்டிங்கால், தோல்வியை மட்டுமே பார்த்து வந்த ஆஸ்ட்ரேலியா, இந்த போட்டியில் இந்தியாவை திணற செய்தது. இந்திய சூழல், சுழல் இரண்டுமே ஆஸ்ட்ரேலியாவையே இதுவரை அச்சுறுத்தி வந்தது. 3 வது போட்டியில் அந்த சூழலின் சூட்டை இந்திய வீரர்களை உணர வைத்தனர் ஆஸ்ட்ரேலிய சுழல் பந்து வீச்சாளர்கள்.
சென்ற 2 போட்டிகளுக்கு கேப்டனாக இருந்த கம்மின்ஸ் தனது தனிப்பட்ட காரியமாக ஆஸ்ட்ரேலியா திரும்பினார். பந்து வீச்சாளர்கள், பேட்ஸ்மேன்கள் இந்திய அணியின் ஆட்டத்தால் கடுமையாக சோத்திக்கப்பட்டு தவித்து வந்த நிலையில் அடுத்த போட்டிக்கு யார் கேப்டன் என்ற கேள்வி முன்வந்தது அதனை தொடர்ந்து தலைமை தாங்க மூத்த வீரர் ஸ்மித் தேர்வானர். ஏற்கனவே நிறைய டெஸ்ட், ஒரு நாள் போட்டிகளுக்கு அணியை வழி நடத்திய அனுபவம் நிறைந்தவர், முன்னணி வீரர் என பல முக்கிய அம்சங்களை வைத்துள்ள வீரர்.
இந்த போட்டியிலும் இந்திய சுழலில் ஆஸ்ட்ரேலியா திணறினாலும், பதிலுக்கு இந்திய பேட்டிங்கை தள்ளாடி தவிக்க செய்தார் ஸ்மித். சிறப்பான ஃபீல்டிங் அமைப்பை பேட்ஸ்மேனுக்கு தகுந்தார் போல உருவாக்கி ரன் குவிப்பை கடினமாக்க, மறுபுறம் தொடர் சுழலை கட்டவிழுத்து விட்டு இந்திய இன்னிங்ஸை 109 க்குள் சுருக்கியது அணியின் வெற்றிக்கு முக்கிய காரணம். இரண்டாவது இன்னிங்சிலும் அதே அதிரடியான பந்து வீச்சு தான் அணியின் வெற்றியை மேலும் உறுதி செய்தது.
இதுவரை இந்தியாவிற்கு வந்த சர்வதேச அணிகள் டெஸ்ட் போட்டிகளில் வென்றது மிக அறிதானது தான். முன்பு இங்கிலாந்து இந்தியாவிற்கு சுற்று பயணம் வந்த நேரத்தில் கூக் தலைமையிலான அணி இந்தியாவை டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து தற்போது ஸ்மித் தலைமை தாங்கிய அணி இந்தியாவை வெற்றி பெற்றுள்ளது.
பாண்டிங் தலைமையில் இந்தியாவுடன் 7 டெஸ்ட் போட்டிகள் இந்தியாவில் நடந்துள்ளது அதில் ஒன்றில் கூட ஆஸ்ட்ரேலியா வெற்றியடையவில்லை. ஸ்மித் இதுவரை 5 டெஸ்ட் போட்டிக்கு தலைமை தாங்கி 2 வெற்றி 2 தோல்வி 1 டிரா செய்துள்ளார். மேலும் இந்தியா அணியை அதன் சொந்த மண்ணில் ஒரு இன்னிங்ஸில் 100 ரங்களுக்குள் 3 முறை ஆல் அவுட் செய்துள்ளது ஸ்டீவ் ஸ்மித் கேப்டன் செய்த ஆஸ்ட்ரேலியா தான். இது போன்ற முக்கிய சாதனைகளை இந்த டெஸ்ட் போட்டியின் வெற்றியின் மூலம் ஸ்மித் அரங்கேற்றியுள்ளார். இதுவரை கம்மின்ஸ் அணிக்கு திரும்புவது பற்றி எந்த தகவலும் வரவில்லை எனவே மீதமிருக்கும் ஒரு டெஸ்ட் போட்டிக்கும் ஸ்மித் தான் கேப்டனாக தொடர்வார் என தெரிகிறது.