டெல்லியில் வீட்டில் வாடகைக்கு தங்கியிருந்த பெண்ணை ரகசிய கேமரா பொருத்தி உளவு பார்த்த வீட்டு உரிமையாளரின் மகன் அப்பகுதி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்திய திருநாட்டின் தலைநகரமான டெல்லியில் சகார்பூர் பகுதியில் ஐஏஎஸ் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த மாணவி ஒருவர் அங்குள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு தங்கி தனது பயிற்சியை மேற்கொண்டு வந்துள்ளார்.
பயிற்சிக்கிடையில் மாணவி ஊருக்குச் செல்லும்போது வீட்டு சாவியை வீட்டு உரிமையாளரின் மகனான கரன் (30) என்பவரிடம் கொடுத்துவிட்டு செல்வதை அந்த மாணவி வழக்கமாக வைத்துள்ளார் .
அப்படி ஒரு நாள் மாணவி ஊருக்கு சென்ற நேரத்தில் மாணவி தங்கியிருந்த வாடகை வீட்டின் குளியலறை மற்றும் படுக்கை அறையில் உள்ள பல்பு ஹோல்டரில் கரன் ரகசிய கேமரா பொருத்தி கண்காணித்து வந்துள்ளார்.
Also Read : அடர்ந்த காட்டுப் பகுதியில் காணாமல் போன சிறுமி ட்ரோன் கேமரா மூலம் மீட்பு..!!
இதனை எப்படியோ தெரிந்துகொண்ட அந்த மாணவி உடனே அப்பகுதியில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று கரன் மீது புகார் கொடுத்துள்ளார் .
இதையடுத்து வீட்டின் குளியலறை மற்றும் படுக்கை அறையின் பல்பில் அவர் கேமராவை பொருத்தி, பல நாட்கள் கண்காணித்து வந்ததை உறுதி செய்த போலீசார் கரனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
ஐஏஎஸ் ஆக வேண்டும் என்ற கனவுடன் ஊரு விட்டு ஊரு வந்த இளம் பெண்ணுக்கு நேர்ந்த இந்த துயர சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.