மகளிர் உலககோப்பை தொடரின் முக்கிய கட்டமாக அரை இறுதி போட்டிகள் தொடங்கி நடந்து வருகின்றன. முதலாவது அரை இறுதி போட்டியில் இந்திய அணியை வெற்றிக்கொண்ட ஆஸ்ட்ரேலியா முதல் அணியாக இறுதி போட்டிக்குள் சென்றது. இதனை தொடர்ந்து இரண்டாவது அரை இறுதி போட்டியில் நேற்று தென் ஆப்பிரிக்கா – இங்கிலாந்து அணிகள் பலபரீட்சை செய்தன.
இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்கசில் பேட் செய்தது. தொடக்க வீராங்கனைகளின் அதிரடி அணிகக்கு பலமான அடித்தளம் கொடுத்தது. பரிட்ஸ்,வோல்வராட் அதிரடியால் 13 ஓவர்களில் 95 ரன்கள் சேரந்தது. இருவரும் அரை சதம் கடந்து வெளியேற பின்னர் வந்தவர்கள் சிறிது ரன் சேர்க்க அணியின் ஸ்கோர் 20 ஓவர்களில் 164 காக நிறைவடைந்தது. இங்கிலாந்து பவுளரான ஸ்டோன் 3 விக்கெட்டை கைபற்றினார்.
இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து நிதானமாக தொடக்கம் அமைத்தது. பவர் பிளே முடிவதற்குள் அரை சதம் கடந்து வலுவான நிலையை உருவாக்கியது. பின்னர் வந்த முக்கிய வீராங்கனை ஸ்கைவர் பார்ட்னர்ஷிப் அமைக்க மெல்ல வெற்றியை நோக்கி சென்றது. இதுவரை நன்றாக சென்ற இங்கிலாந்து பாதையில் திடீர் திருப்பம் ஆரம்பமானது. அணியின் கேப்டனான நைட் 31 ரன்களில் வெளியேற காட்சிகள் மாறின.
தென் ஆப்பிரிக்கா பவுளர், கக்கா இங்கிலாந்து கனவு கோட்டையை தகர்தெரிந்தார். 18 வது ஓவரில் 3 ரன்கள் மட்டும் கொடுத்து 3 முக்கிய விக்கெட்களை கைப்பற்றி ஆட்டத்தின் போக்கையே மாற்றினார். இறுதி ஓவரில் 13 ரன்கள் தேவை என்று இருந்த நிலையில், 6 ரன்கள் மட்டுமே அடித்து 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது இங்கிலாந்து.
உலகக்கோப்பை வரலாற்றில் தென் ஆப்பிரிக்கா அணி இறுதி போட்டிக்கு தகுதி பெறுவது இதுவே முதல் முறையாகும். இந்த வெற்றியால் ஞயிற்று கிழமை நடைபெறும் பலம் வாய்ந்த ஆஸ்ட்ரேலியாவிற்கு எதிரான இறுதி போட்டியில் களம்காண்கிறது தென் ஆப்பிரிக்கா.