நடப்பு யூரோ கோப்பை கால்பந்து தொடரில் ஸ்பெயின் அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது.
கால்பந்து ரசிகர்கள் விரும்பி பார்க்கும் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான யூரோ கோப்பை கால்பந்து போட்டிகள் ஜெர்மனியில் சிறப்பாக தொடங்கி நடைபெற்று வந்தது .
இந்த மாபெரும் தொடரில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஸ்பெயின் – இங்கிலாந்து அணிகள் மோதியது .
அனல் பறக்க ஆரம்பிக்கப்பட்ட இந்த போட்டியில் ஸ்பெயினின் நிகோ வில்லியம்ஸ், மைகேல் யார்ஸபால் இருவரும் தலா 1 கோல் அடித்து அணியின் வெற்றிக்கு விதித்திட்டனர். அப்படியே இந்த பக்கம் இங்கிலாந்தின் கோலே பால்மர் ஒரு கோல் அடித்துள்ளார்
இறுதி வரை பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியின் முடிவில் 2 – 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற ஸ்பெயின்அணி 4 ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று யூரோ கோப்பையை கைப்பற்றியுள்ளது
Also Read : மாநில உரிமை என்ற போலி நாடகத்தை அரங்கேற்ற வேண்டாம் – அண்ணாமலை அட்டாக்
யூரோ தொடரில் 7 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தையும் வென்ற முதல் அணி என்ற சாதனையை படைத்துள்ளது ஸ்பெயின். இத்தொடரில் மொத்தம் 15 கோல்களை ஸ்பெயின் பதிவு செய்துள்ளது.
களத்தில் துடிப்புடன் செயல்படும் இளம் வீரர்கள் அதிகம் கொண்ட அணியாகவும் ஸ்பெயின் உருவெடுத்துள்ளது.
யூரோ தொடரில், 1964, 2008, 2012, 2024 ஆகிய ஆண்டுகளில் ஸ்பெயின் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது