துயரத்தில் இருக்கும் மக்களிடம் ஆறுதலான மொழியில் பேசி, உறுதி கொடுத்தால் மக்கள் மத்தியில் காவலர்கள் மீது நேர்மறையான எண்ணம் ஏற்படும் என ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம்
காவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார் .
இதுகுறித்து ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் கூறியதாவது :
காவலர்களிடமும், பொதுமக்களிடமும் பேசும்போது காவல் அதிகாரிகள் மரியாதைக்குரிய விதத்தில் அழைக்க வேண்டும்; Mister, Mrs, Miss, Sir, Madam வேண்டும்
ஒருமையில் பேசாமல் ‘வாங்க, போங்க’ என்றே குறிப்பிட வேண்டும்; தேவைப்படும் இடத்தில், Please, Thank You, Excuse Me பயன்படுத்த வேண்டும்.
மக்கள் குறைகளைக் கூறும்போது அதை உதாசீனப்படுத்தாமல், நேருக்கு நேர் பார்த்து உரையாட வேண்டும்; உடல்மொழி, மக்களை அச்சுறுத்தாமல் இருக்க வேண்டும்.
மரியாதையான தூரத்தில் இருந்தபடி சாமானியர்களுக்கு புரியும் வகையில் எளிமையாக விஷயங்களை எடுத்துக் கூற வேண்டும்.
Also Read : தமிழகத்தில் அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல் – வெளியான அதிர்ச்சி தகவல்..!!
துயரத்தில் இருக்கும் மக்களிடம் ஆறுதலான மொழியில் பேசி, உறுதி கொடுத்தால் மக்கள் மத்தியில் காவலர்கள் மீது நேர்மறையான எண்ணம் ஏற்படும்.
தங்கள் கீழ் பணிபுரியும் காவலர்களை அதிகாரிகள் அழைக்கும்போது சம்பந்தப்பட்டவர்களின் ரேங்க், அதைத் தொடர்ந்து அவர்களது பெயரையும் சேர்த்து கூப்பிட வேண்டும்.
காவலர்கள் தங்களது குறைகளை தயக்கமின்றி கூறும் சூழலை ஏற்படுத்துவதோடு, அவர்களின் வெற்றியை தவறாது பாராட்ட வேண்டும் என ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் கூறியுள்ளார்.