தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் வரும் 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை மாலை மற்றும் இரவு நேரங்களில் சிறப்பு மாநகர பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
ஹிந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் நவம்பர் 12 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.
இந்நிலையில் தீபாவளி பண்டிகை அன்று பாதுகாப்பான முறையில் பட்டாசு வெடிப்பது , வெளி ஊரில் வேலை பார்ப்பவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக சிறப்பு பேருந்துகள் , சிறப்பு ரயில்கள் என பல வசதிகளையும் , பாதுகாப்பு வழிமுறைகளையும் மாநில அரசுகள் துரிதமாக மேற்கொண்டு வருகின்றன.
அந்தவகையில் தீபாவளி முடிந்து சென்னை திரும்பும் பயணிகளின் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது .
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில் :
சென்னையில் மாலை மற்றும் இரவு நேரங்களில் 60 மாநகர சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்துத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது . சிறப்பு பேருந்துகளில் சொகுசு பேருந்து கட்டணம் வசூலிக்கவும் போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.
உரிய வழித்தட பெயர் பலகை சரிவரப் பொருத்தியும், பயண சீட்டுகள் 100% அதிகப்படுத்தியும் இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அனைத்து மண்டல கிளை மேலாளர்களுக்கு, போக்குவரத்துத் துறை மேலாண் இயக்குநர் சுற்றறிக்கை விடப்பட்டுள்ளது.