மனித – விலங்கு மோதலைத் தடுக்க சிறப்புப் படை (Special Force) அமைக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியும் கூறிருப்பதாவது :
தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் ஒரு மாதத்தில் யானை தாக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் கடந்த 3 ஆண்டுகளில் 152 பேர் யானைகளால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர்.
நாளுக்கு நாள் மனித & விலங்குகள் மோதல் அதிகரித்து வரும் நிலையில், அவற்றைத் தடுப்பதற்கான ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை தமிழக அரசு இதுவரை மேற்கொள்ளவில்லை என்பது வருத்தமளிக்கிறது.
தமிழ்நாட்டில், அதிலும் குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலையோரம் அமைந்துள்ள மாவட்டங்களில் மனித & விலங்குகள் மோதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
மனித & விலங்குகள் மோதலால் உயிரிழப்புகள் மட்டுமின்றி, பொருள் இழப்புகளும் மிக அதிகமாக ஏற்படுகின்றன.
ஜனவரி 17&ஆம் நாள் முதல் பிப்ரவரி 19 வரையிலான 32 நாட்களில் மட்டும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் யானைகள் தாக்கி மூன்று பெண்கள், 2 ஆண்கள் என 5 பேர் இறந்துள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் கடந்த 2019 முதல் 2022 வரையிலான 3 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் புலிகள் மற்றும் யானைகள் தாக்கி 1700 பேர் உயிரிழந்திருப்பதாகவும்
தமிழ்நாட்டில் யானைகள் தாக்குதலில் மட்டும் 152 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும் மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்புகள் தெரிவிக்கின்றன.
மற்றொருபுறம் வன விலங்குகள் தாக்குதலில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் வேளாண் விளைபொருட்கள் சேதமடைந்துள்ளன.
விலங்குகள் தாக்குதலில் கொல்லப்படுவோரின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று அண்மையில் தமிழக அரசு அறிவித்தது. ஆனாலும், விலங்குகளால் கொல்லப்படும் உயிர்களுக்கும், சேதமடையும் பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படுவதில்லை.
வனத்தை விட்டு யானைகள் உள்ளிட்ட விலங்குகள் வெளியே வருவதை கண்காணித்து, அவற்றை மீண்டும் வனத்திற்குள் அனுப்பி வைப்பது தான் பயனளிக்கும் தீர்வாக இருக்கும். அதற்காக தனிப்படைகள் அமைக்க வேண்டியது கட்டாயம் ஆகும்.
ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களிலும் மனித& விலங்கு மோதல் பெரும் சிக்கலாக உருவெடுத்து வருகிறது.
அதை சமாளிப்பதற்காக அந்த மாநிலங்களில் ஒவ்வொரு சரகத்திலும் வனச்சரக அலுவலர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
அப்படைகளுக்கு போதிய எண்ணிக்கையில் வனக்காவலர்கள் ஒதுக்கப்பட்டிருப்பதுடன், வாகனம் உள்ளிட்ட அனைத்துக் கட்டமைப்பு வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன.
அப்படைகள் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவதால் ஆந்திரம், கர்நாடகத்தில் மனித & வன விலங்குகள் மோதல் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்திருக்கின்றன.
Also Read : https://itamiltv.com/why-hesitate-to-conduct-tncaste-wise-census/
எனவே, தமிழக வனத்துறையில் வன விலங்குகள் ஊருக்குள் நுழைவதை கண்காணித்து காட்டுக்குள் மீண்டும் அனுபுவதற்கான தனிப்படைகளை அமைக்க வேண்டும் வனப் பகுதிகளின் பரப்பளவை குறைக்க வேண்டும்.
இந்த நடவடிக்கைகளின் மூலம் தமிழ்நாட்டில் (Special Force) மனித & விலங்கு மோதல் நிகழாமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். .