தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னையிலிருந்து கோவை வந்தவர்கள் பயனடையும் வகையில் வரும் ஞாயிற்றுக்கிழமை (28.1.2024) இரவு கோவையில் இருந்து சென்னை இடையே கூடுதல் ரயில் சேவை (special trains) அறிவிக்கப்பட்டிருக்கிறது.
பணிநிமிர்த்தம் உள்ளிட்ட காரணங்களால் பொதுமக்கள் வெளியூர்களில் தங்கி உள்ளனர். விடுமுறை நாட்களில் அவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வருவது வழக்கம்.
குறிப்பாக தீபாவளி, பொங்கல் தினங்களில் விடுமுறையை சொந்த ஊரில் உறவினர்களுடன் கொண்டாட சொந்த ஊர்களுக்கு மக்கள் படையெடுப்பார்கள்.
இதையும் படிங்க :Aayi ammal-லுக்கு முதலமைச்சரின் சிறப்பு விருது!
அவர்கள் சிரமம் இன்றி சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்ள தமிழ்நாடு அரசு சிறப்பு பேருந்துகள், மற்றும் சிறப்பு ரயில்களை இயக்குகிறது.
அந்த வகையில் கன்னியாகுமரி மற்றும் கோவையில் இருந்து சென்னைக்கு நாளை சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் தைப்பூசத்தை முன்னிட்டு வழங்கப்பட்ட தொடர் விடுமுறை நாளையுடன் முடிவதையடுத்து, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கோவை சிறப்பு ரயில் இரவு 11.30 மணிக்கும், குமரி சிறப்பு ரயில் (special trains) இரவு 8.30 மணிக்கும் சென்னைக்குப் புறப்பட உள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
ஞாயிற்றுக்கிழமை கோவையிலிருந்து இரவு 11.30 க்கு இந்த ரயில் புறப்பட்டு, ஜனவரி 29 ஆம் தேதி நள்ளிரவு 12:10 க்கு திருப்பூரைச் சேருகிறது.
இதையும் படிங்க : Headlines : இன்றைய தலைப்புச் செய்திகள்
அங்கிருந்து நள்ளிரவு 1 மணி அளவில் ஈரோடு வருகிறது, 2 மணிக்கு சேலம்,3: 55 மணிக்கு ஜோலார்பேட்டை, காலை 5 மணிக்கு காட்பாடி, 6:43 க்கு அரக்கோணம், 7:38 மணிக்கு பெரம்பூர் மற்றும் காலை 8:30க்கு சென்னை ரயில் நிலையத்தை இந்த ரயில் வந்து அடைகிறது.
https://x.com/ITamilTVNews/status/1751128803001446911?s=20
29ஆம் தேதி மதியம் 1:45க்கு சென்னையில் இருந்து மீண்டும் புறப்பட்டு பெரம்பூர் அரக்கோணம் காட்பாடி ஜோலார்பேட்டை சேலம் ஈரோடு திருப்பூர் வந்து இரவு 11: 05 மணிக்கு கோவை வந்து சேர்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.