காதல் மனைவியின் முகவரியைப் பயன்படுத்தி ஆதார் அட்டை மற்றும் பாஸ்போர்ட் பெற்ற இலங்கை நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
குமரி மாவட்டம் வள்ளவிளை மீனவ கிராமத்தில் உள்ள பெண்ணை திருமணம் செய்து அங்கேயே தங்கி சட்ட விரோதமாக பாஸ்போர்ட் பெற்றதாக இலங்கை புலம்பெயர் நபரான ஜார்ஜ் வாஷிங்டன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
Also Read : ஏர்போர்ட் வேலை வருதா..? யாரும் நம்பி ஏமாறாதீர்கள்..!!
1990ம் ஆண்டு இந்தியா வந்த ஜார்ஜ் வாஷிங்டன், சிவகாசி அருகே உள்ள முகாமில் தங்கி பள்ளி, கல்லூரி படிப்புகளை முடித்துள்ளார். கல்லூரியின் போது வள்ளவிளையைச் சேர்ந்த பெண்ணுடன் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து மனைவியுடனே தங்கி ஓட்டுநராக வேலை செய்து வந்துள்ளார்.
மனைவியின் முகவரியைப் பயன்படுத்தி ஆதார் அட்டை பெற்றவர், அதை வைத்து பாஸ்போர்ட் எடுத்துள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.