T20 உலகக்கோப்பை தொடரின் முக்கிய சுற்றான சூப்பர் 12 சுற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சுற்றில் இன்று நடக்கும் ஆட்டடத்தில் பலம் வாய்ந்த நியூசிலாந்து(Newzealand) அணியும் ஆசிய கோப்பை சாம்பியன் இலங்கை (srilanka) அணியும் மோதுகின்றன. இந்த போட்டி சிட்னியில் உள்ள எஸ்சிஜி மைதானத்தில் நடைபெறும்.
நியூசிலாந்து அணி இதுவரை 2 போட்டியில் விளையாடி ஒரு வெற்றி பெற்றுள்ளது மற்றவு போட்டி மழையால் கைபவிடப்பட்டு ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இருப்பினும் 2 புள்ளிகள் பெற்று குரூப் 1 பிரிவில் முதல் இடம் பிடித்துள்ளது. பலம் வாய்ந்த நடப்பு சாம்பியன் ஆஸ்ட்ரேலியா அணியை சந்தித்த முதல் போட்டியில் அதிரடியாக வென்றது.
இலங்கை அணியும் 2 போட்டியில் விளையாடி 1 வெற்றி, ஒரு தோல்வியுடன் 5 ஆம் இடத்தில் இருந்து வருகிறது. இன்று நடக்கும் போட்டியில் இலங்கை தோல்வியை தழுவினால் அரை இறுதிக்குள் நுழைவது சந்தேகம் தான். நியூசிலாந்து அணி வெற்றி பெற்றால் அரை இறுதி வாய்ப்பு கிட்டதட்ட உறுதியாகி விடும்.
ஏற்கனவே மழை காரணமாக இதுவரை நான்கு போட்டிகள் ரத்தாகிவுள்ளன இதில் குரூப் 1 பிரிவில் மட்டும் 3 போட்டிகள் அடங்கும். இதனால் அந்த பிரிவில் எந்த அணி அரை இறுதி போட்டிக்கு முன்னேறும் என்பதில் சிக்கல் நீடிக்கிறது. நேற்று நடக்கவிருந்த இரண்டு போட்டிகளும் மழையால் ரத்தானது குறிப்பிடத்தக்கது.